திருமணம் குறித்த கட்டுப்பாடுகளில் மாற்றம்! பயணக்கட்டுப்பாடுகளும் இல்லை (Video)
பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புத்தாண்டில் கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பண்டிகை காலத்தில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடைக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
எனினும், புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமல்படுத்தப்படவில்லை.
இதேவேளை, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த தடை இந்த புதிய சுகாதார வழிகாட்டியின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது.


