எரிபொருள் விநியோக முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்..! வெளியாகியுள்ள புதிய தகவல்
எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை - ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இறுதி வரை நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.
எரிபொருள் கொள்வனவு தொடர்பான அத்தியாவசிய டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் எவ்வித தடையுமின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விநியோக முறைமை
எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை - ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசைகள் தொடர்ந்து குறைந்து, நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், இந்த விநியோகக் கட்டுப்பாட்டு முறைமையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam