எரிபொருளின் தரத்தில் மாற்றம்: இலங்கையில் வாகனங்களுக்கு பாரிய ஆபத்து
அரசாங்கத்தின் தலையீட்டினால் எரிபொருளின் தரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியியே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மண்ணெண்ணெய் கலக்கப்பட்டதாக நம்பப்படும் எரிபொருள் மாதிரிகள் கூட உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அரசாங்கம் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதை நம்ப முடியாது எனவும், அரசாங்கம் வேண்டுமென்றே அவ்வாறான ஆராய்ச்சிகளைத் தவிர்த்து வருவதாகவும், மாதிரிகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் பல வாகனங்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு எரிபொருள் இறக்குமதி செய்வதில் பல பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆனந்த பாலித வெளிப்படுத்தியுள்ளார்.
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடும் ரஷ்யா: மத்திய கிழக்கில் காத்திருக்கும் ஆபத்தான நாட்கள் News Lankasri