சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் - இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ( 6) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் எரிபொருள் விலையில் தாக்கம்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக, உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய துல்லியமான தாக்கத்தை அரசாங்கத்தினால் தற்போது கணிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்கனவே ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.
எரிபொருள் விலைத்திருத்தம்
இந்நிலையில், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நிதி அமைச்சு மற்றும் ஏனைய துறைசார் அமைச்சுகள் கலந்துரையாடி தகுந்த தீர்மானங்களை எடுக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
எரிபொருள் விலைத்திருத்தம் குறித்த இறுதி முடிவுகளுக்கமைய எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri