மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
சந்தையில் மீன் வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தையில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
தற்போது நிலவும் காலநிலை மற்றும் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே இவ்வாறு விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மீன் விலை விபரங்கள்
சந்தையில் இன்றைய தினம் (10.06.2026) நிலவும் மீன் விலை விபரங்களின் அடிப்படையில், லின்னோ (சூரை) மீன் ஒரு கிலோகிராம் 1300 ரூபா, சாளை மீன் ஒரு கிலோகிராம் 800 முதல் 900 ரூபாய் வரை, தலபத் மீன் ஒரு கிலோகிராம் 2500 ரூபாய் என பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan