நாளை முதல் பேருந்து சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியாகியுள்ள தகவல்
திங்கட்கிழமை (16) முதல் ஒவ்வொரு பேருந்து சாலைகளில் இருந்தும் உயிர்-குமிழி அமைப்பின் கீழ் அலுவலக ஊழியர்களுக்கான பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி பணியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள் மற்றும் மாதத்தில் தலா 15 நாட்கள் உயிர்-குமிழி அமைப்பின் கீழ் ஈடுபடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன், பேருந்து சேவைகளில் ஆள் வெற்றிடம் ஏற்படும். இதன்போது ஊழியர்களுக்கு மேலதிக நேர கட்டணம் செலுத்தப்படும் மற்றும் கால அட்டவணையின் படி 100 வீதம் துல்லியமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின், சுமார் 285 ஊழியர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கோவிட் நிலைமை இருந்தபோதிலும், போக்குவரத்து சேவையைத் தொடர அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
