இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அதிகரித்துள்ள தேவை
சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா போன்ற அரிசி வகைகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.
தேவை அதிகரிப்பு
அதன்படி, நாடு மற்றும் கெகுலு போன்ற அரிசி வகைகளின் தேவையை விட சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளது.

மேலும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியை அதிகமாக பயிரிட விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, அரசாங்கம் இந்த வகைகளின் கொள்முதல் விலையை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |