ஐந்து ஆண்டுகளின் பின்னர் கட்சித் தலைமையகம் சென்ற சந்திரிக்கா
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga) ஐந்து ஆண்டுகளின் பின்னர் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்திற்கு அவர் இன்று(06.05.2024) விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் தலைமைப் பதவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தம்மை துரத்தியதன் பின்னர் முதல் தடவையாக கட்சித் தலைமையகம் வந்துள்ளதாகவும், கட்சியின் தலைமைப் பதவியை எதிர்பார்த்து தாம் செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டை முன்னோக்கி நகர்த்தும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கவும் கட்சியை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவுடன் அமைச்சர் மஹிந்த அமரவீர, கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டவர்கள் கட்சித் தலைமையகம் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
