தெற்கு அரசியல்வாதிகளிடம் சந்திரிகா விடுத்துள்ள கோரிக்கை-செய்திகளின் தொகுப்பு
இனவாதம், மதவாதம் பேசி வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சீண்டி பார்ப்பதை தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
13மைனஸ், 13பிளஸ் எனக் கூறுபவர்களில் ஒரு தரப்பினர் இனவாதத்தையும் மதவாதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டில் இனவெறியை, மதவெறியை தூண்டும் கருத்துக்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கின்றன.
இது முழு நாட்டுக்கும் பேரவமானத்தை ஏற்படுத்தும். வடக்கு, கிழக்கு மக்களோ அல்லது தெற்கில் உள்ள மக்களோ மீண்டுமொரு வன்முறையை, யுத்தத்தை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,