வடக்கு, கிழக்கு மக்களுக்கு உரிமைகளை ஏன் வழங்க முடியாது..! சந்திரிகா கேள்வி
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தினார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்கள் முன்னிலையில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு இன்று வயதாகிவிட்டது. இளம் வயது முதல் இன்றுவரை இனப்பிரச்சினை பற்றி கதைத்துக்கொண்டிருக்கின்றோம். அப்பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் நிலையானதொரு தீர்வு அவசியம்.
வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்து, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினால் போதும், வேறொன்றும் அவசியமில்லை எனச் சிலர் கூறுகின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல. இவ்வாறான கருத்தை நம்ப வேண்டாம்.
உரிமைகளை வழங்குவதே இனப்பிரச்சினைக்கு தீர்வு
அவர்களுக்கான (வடக்கு, கிழக்கு மக்கள்) உரிமைகளை ஏன் வழங்க முடியாது? உரிமைகளை வழங்காவிடின் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.
இனப்பிரச்சினையை இனியும் நீடிக்க இடமளிக்கக்கூடாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைக்க வேண்டாம் என எனக்குச் சொல்கின்றனர். அவ்வாறு கதைக்காமல் இருக்க முடியாது.
13 போதும் என்று வடக்கு,
கிழக்கு மக்கள் கூறுவார்களாயின் குறைந்தபட்சம் அதைச் செய்வதற்காவது நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.
நாட்டை நேசிப்பவர்கள் போராடியாவது 13 ஐ வடக்கு, கிழக்கு மக்களுக்குப்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
