அரசாங்கம் அரச சேவையை அழித்து வருவதாக குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச சேவை அழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஆட்சிமுறையில் மாற்றம் செய்யப்படாவிட்டால் நாடு பாரிய நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிழையான ஆட்சி முறை
இரண்டு தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட பிழையான ஆட்சி முறைகளினால் ஏற்கனவே நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொழில்முறையான நேர்மையான மற்றும் வினைத்திறான அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றி அரசாங்கத்தினால் நவடடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் அரச சேவையை அழித்து வருவதாகவும் நேர்மையான அனுபவம் மிக்க அதிகாரிகளை பணியில் அமர்த்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாறாக அனுபவம் அற்ற கட்சி ஆதரவாளர்கள் கட்சி உறுப்பினர்கள் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனுபவம் தேவையில்லை
அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவம் தேவையில்லை என்ற போதிலும் நேர்மையாக செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமன் ஏக்கநாயக்க நேர்மையான தொழில் தகுதி மிக்க ஓர் அதிகாரி என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan