தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன்! சந்திரிக்கா
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமர்
பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக ரிஷி சுனக் தேர்வானதையடுத்து அந்நாட்டின் பிரதமராக தெரிவானார்.
பிரித்தானிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் பிரதமரானமை இதுவே முதல் தடவை.
இந்த நிலையில் டுவிட்டர் பதிவொன்றில் சந்திரிக்கா, தனது வாழ்த்துக்களை ரிஷி சுனக்கிற்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பதிவு
அந்த பதிவில் மேலும், கன்சர்வேடிவ் கட்சித் தலைமை மற்றும் பிரித்தானியாவின் பிரதமருக்கான தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ரிஷி சுனக்கிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுனக்கின் வெற்றி தெற்காசியாவில் உள்ளவர்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
ஏனெனில் இது பிரித்தானியாவில் ஜனநாயக நிறுவனங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Hearty congratulations to Rishi Sunak on your victory at the elections for Conservative Party leadership and Prime Minister of the UK.The most striking fact for us in South Asia ,is how superbly Democratic institutions work in the UK.Proud a South Asian will lead the UK.
— Chandrika Bandaranaike Kumaratunga (@CBKsrilanka) October 24, 2022