மோசமாகியுள்ள சந்திரிகாவின் உடல்நிலை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி வாடகை வீட்டிற்கு குடிபெயர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கும்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதிகள் அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள கெப்பிட்டிபொல மாவத்தையில் உள்ள தனது வீட்டை காலி செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |