ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த கலந்முரையாடலானது இன்றையதினம்(8) தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
தற்போதைய நிலைமை
இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர்.

நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து அவருடன் கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாமலின் எயார்பஸ் ஊழலில் தொடர்புப்பட்ட இருவரின் மர்ம மரணங்கள்! நான்கு மரணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சர்ச்சை
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening