இந்தியாவுடனான டெஸ்டில் தினேஷ் சந்திமாலுக்கு உபாதை
இந்தியாவிற்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
எல்லைக் கோட்டிற்கு அருகில் பந்தை தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபாதையின் நிலைமை
சம்பவம் நடந்த உடனடியாக மைதானத்திலேயே அணியின் உடலியக்க நிபுணர் அவரைப் பரிசோதித்ததுடன், அதனைத் தொடர்ந்து மேலதிக பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அவரது உபாதையின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
பரபரப்பான கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு! அடுத்துவரும் நாட்களில் வெளிவரவுள்ள பல உண்மைகள்
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஆறு மாதங்களில் 40,000 புலம்பெயர்ந்தோர்: சுவிட்சர்லாந்திருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு News Lankasri