சுசில் பிரேமஜயந்தவின் வீட்டில் சந்திம வீரக்கொடி
ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு (Susil premajeyantha) அரசாங்கம் வழங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நீண்டகாலமாக தங்கி இருப்பதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடியே (Chandima Weerakkody) அந்த வீட்டில் வசித்து வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள 110/2 என்ற விலாசத்தில் உள்ள வீடு சுசில் பிரேமஜயந்தவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டில் சந்திம வீரக்கொடியே வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான அரசாங்கத்தின் வீட்டில் வசிக்கும் அதே நேரத்தில் சந்திம வீரக்கொடி அண்மைய காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri