எல் நினோவின் தாக்கத்தால் உருவாகும் ஆபத்தான சூழ்நிலை - இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
தற்போதைய எல் நினோ நிகழ்வு அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான நிகழ்தகவு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னகே தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் மழையற்ற வானிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (20.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வெப்பநிலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த எல் நினோ நிலை அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை தொடரும் என்பதற்கு 97% உலகளாவிய கணிப்பு உள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழைப்பொழிவு கணிசமாக குறையும். வெப்பநிலை உயரும்.
மனித உடல் தாங்க முடியாத கடினமான ஆபத்தான சூழ்நிலைக்குச் செல்லக்கூடும் என தெரிவித்துள்ளார்.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு