ஆபத்தான நபரான ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளியான ஷிரான் பாசிற்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய ஷிரான் பாசிக்கிற்குச் சொந்தமான அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பெருந்தொகை பணத்தை ஈட்டிய ஷிரான் கொழும்பு உட்பட பல இடங்களில் சொத்துக்களை வைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகள்
இவ்வாறான நிலையில் ஷிரான் பெயரில் நேரடியாக உள்ள வங்கிக் கணக்குகள் மற்றும் பினாமி பெயரிலுள்ள சேமிப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களால் கூட்டாக நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஷிரான் பாசிக் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில் நாட்டுக்கு இழுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan