நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை-பொதுஜன பெரமுன
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்ட உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பெயர்களை கெடுத்துக்கொண்டவர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர்
அரசியலுக்கு வந்த பின்னர்,தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் கட்சிக்குள் இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்துவதற்கு தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக்கொண்டவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ளது எனவும் சாகர காரியவசம் மேலும் கூறியுள்ளார்.



