மரணமடைந்த அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள்
பாதுகாப்பு அதிகாரிகள் மரணமடைந்த எம்.பிக்களின் மனைவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சில சந்தர்ப்பங்களில், சில ஆண் எம்.பிக்களுக்கு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகார அமைப்பின் தலைவர் கமந்த துஷார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளை வேறு பணிகளுக்குப் பயன்படுத்துவது குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பில்
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகார அமைப்பின் தலைவர் கமந்த துஷார அக்டோபர் 3, 2024 அன்று தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழு எழுத்து பூர்வமாக கமந்த துஷாரவுக்குத் தெரிவித்துள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்பு கொள்கைகளில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முறையாக மதிப்பிட்ட பின்னரே பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்படுகிறார்கள்.
ஆனால் கடந்த காலங்களில், அத்தகைய மதிப்பீடுகள் இல்லாமல் பல்வேறு நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, இந்த பணியமர்த்தல்கள் முறையான நடைமுறைகள் மூலம் செய்யப்படவில்லை.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் அவற்றால் பயனடைந்த நபர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும், பின்னர் அரசாங்கத்தால் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கமந்த துஷார மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



