இன்றைய போராட்டத்திற்கு மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சாணக்கியன் அழைப்பு
இன்று இடம்பெறும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மீண்டும் மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள், ஏன் அரசின் நிகழ்வுகள் கூட கோவிட் 19 மத்தியில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் நடாத்தும் போது மாத்திரம் கோவிட் 19உம், நீதிமன்ற உத்தரவுகளும் வருகின்றன.
இது தான் இந்த நாட்டின் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம். அரசின் இவ்வாறான பாரபட்சம் காட்டும் அடக்குமுறைக்கு எதிராகவுமே இன்று இந்தப் போராட்டம் பொத்துவிலில் ஆரம்பிக்கின்றது.
நாங்கள் அதற்குத் தயாராகியுள்ளோம், எமது மக்களுக்காக எத்தடையையும் உடைக்கத் தயாராகவுள்ளோம்.
எனவே எமது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இது எமது உரிமைக்கான போராட்டம் என்று தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
ஒரேயடியாக 10,000 பேர்கள்... ஜேர்மனியின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தின் அதிரடி முடிவு News Lankasri
Starlink சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்திய ஈரான்: கொந்தளித்த எலான் மஸ்க் News Lankasri
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri