ரணிலின் சந்திப்பில் மௌனமான சாணக்கியன்! மூடிய அறைக்குள் நடந்தது என்ன..! நாடாளுமன்ற உறுப்பினர் (VIDEO)
தமிழ் மக்களின் நன்மைக்கருதி சிலர் தனக்கு வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மௌனம் காத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் நன்மைக்கருதி சிலர் தனக்கு வாக்களித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்தின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமான இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கருத்தினை தெரிவிக்கும் போது அருகில் இருந்த சாணக்கியனும் மௌனமாகத்தான் இருந்தார்.எனவே அவர் தன்னையும் உள்ளடக்கியே இந்த கருத்தினை முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,