கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து(Photos)
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நடந்து முடிந்த கோப் குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி முறை காரணமாகக் கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்கலான கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான உபகரணம் தற்போது காத்தான்குடி நகர சபையில் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே இதனை வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இல்மனைட் அகழ்விற்கான அனுமதியினை கடல்சார் திணைக்களங்களிடமும்
பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.


ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri