தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக தெரிவான சாணக்கியன்! முல்லைத்தீவில் பாராட்டு
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக இளம் அரசியல் தலைவரான இரா. சாணக்கியன் நியமிக்கப்பட்டதினை வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் இன்று (05.02.2026) பதாதைகள் கட்டப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணியினரால் வாழ்த்து பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்
உங்கள் செயற்பாடுகள் சமூக நலனுக்கும் அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாக அமையட்டும் எனும் வாசகத்துடன் அமைக்கப்பட்ட குறித்த பதாதைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இளம் தலைமுறையின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான ஒரு முக்கிய அடையாளமாக இரா. சாணக்கியனின் இந்த நியமனம் அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர் மக்கள் நலன் சார்ந்த அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri