சஜித்தின் செயற்திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி
நல்லாட்சி அரசு காலப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முழுமையடையுமா என சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்,
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதி
இந்த வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் எம்முடைய மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சராக இருக்கும் போது உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மட்டுமில்லை.
இலங்கை முழுவதும் அவருடைய திட்டத்தின் கீழ் வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், 2019ஆம் ஆண்டிலிருந்து அப்போதைய அரசாங்கத்தில் அந்த வீட்டுத் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பல வீட்டுத்திட்ட பயனாளிகளில் பலர் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்டளவு வேலைகளை செய்தால் அடுத்த தொகை கிடைக்கும் என்றே அவர்களுக்கு கூறப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டம்
ஆனால் துரதிஷ்டவசமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் எத்தனையோ வீடுகள் குறைபாட்டுடனேயே காணப்படுகின்றன.
கடந்த ஆட்சிக் காலத்தில் முதலாவது கட்டமாக அந்த வீடுகளை நிறைவு செய்யுமாறு நாங்கள் வீடமைப்பு அதிகார சபைக்கு கூறினோம்.
என்னுடைய கேள்வி என்னவென்றால், இனிவரும் காலத்தில் முடித்து தருகிறோம் என்பது திருப்தியடையக் கூடிய பதில் இல்லை.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் என்றால் நாம் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருட காலத்திற்குள் நிறைவு செய்து தருகிறோம் அல்லது நாம் முடித்து தர மாட்டோம் என கூற வேண்டும்’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
