ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை யாழில் ஆரம்பித்த சம்பிக்க! எதிரணிகள் வியூகம்
வடக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளார் என அறியமுடிந்தது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொதுவேட்பாளராக சம்பிக்க ரணவக்கவைக் களமிறக்கத் தெற்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதற்கான முன்னாயத்த வியூகங்களில் எதிரணிகள் களமிறங்கியுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள - பௌத்த மக்கள் மத்தியிலும், பௌத்த தேரர்கள் மத்தியிலும் சம்பிக்கவுக்குத் தனியான இடம் இருப்பதால் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக அவரைக் களமிறக்க எதிரணிகள் தீர்மானித்துள்ளன எனவும் கூறப்படுகின்றது.
அவரது 47 ஆவது படையணியின் பெயரிலேயே அவர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
இற்குச் சம்மதம் தெரிவித்துள்ள சம்பிக்க, கள நிலைமைகளை நேரில் ஆராய நாடு முழுவதற்கான பயணங்களைத் தற்போது ஆரம்பித்துள்ளார்.
அதன் ஓர் கட்டமாகவே அவர் வடக்குக்கு விஜயம் செய்துள்ளார் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) அவர் யாழ். நகரில் விநியோகித்த துண்டுப்பிரசுரங்களில் இந்த
அரசையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சாரப்பட
கருத்துக்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri