ராஜபக்சர்களின் மாய விம்பம் உடைந்தது: நெருக்கடியில் இலங்கை
சேதனப்பசளை விடயத்தில் சீனா, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் பாரதுாரமான தலையீட்டை மேற்கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க(Champika ranawaka) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தவறுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்வு இன்று திகாமடுல்லையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
சீனா இலங்கைக்கு உதவியளிக்கிறது என்று ராஜபக்சா்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த மாயை இந்த விடயத்தில் உடைக்கப்பட்டுள்ளது. இதற்காக சீனாவுக்கு நன்றி கூறவேண்டும். மறுபுறத்தில் இலங்கையின் உள்ளக விடயத்தில் சீனாவின் போக்கு பாரதுாரமானதாக அமைந்துள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை மாற்றியமைத்து சேதனப்பசளை தொடர்பாக இரகசிய வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திடம் சவால் விடுக்கின்றேன்.
அரசாங்கம் 2005- 2015 ஆண்டுகளின் ஆதாயமற்ற விடயங்களுக்காக பெற்ற கடன்களை செலுத்துவதன் காரணமாக நாடு இன்று பாாிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளைப்பூண்டு, சேதனப்பசளை என்ற அனைத்து விடயங்களிலும் களவும் கொள்கையும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை வங்கியையும் மக்கள் வங்கியையும் இன்று சர்வதேச நாடுகள் அங்கீகாிக்க மறுக்கின்றன. இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும.
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர செயற்பட்ட 11 கட்சிகள், அமெரிக்காவுக்கு சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டன.
எனினும் எரிவாயு விநியோகம் என்ற வகையில் குறித்த நிறுவனம் அமாிக்க மின்சார மாபியாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri