பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.
அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தீர்மானித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் (09.01.2024) நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
பதவி விலகல் கடிதம்
இதன்போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது மனசாட்சி படி தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த முடிவை எடுப்பதால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri