சமீபத்தில் திருத்தப்பட்ட நியூ சவுத் வேல்ஸ் ஒப்புதல் சட்டங்கள் குணதிலக்க வழக்கில் பொருந்தும்
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்டு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் இந்த ஆண்டு ஜூன் முதல் நடைமுறைக்கு வந்த உறுதியான ஒப்புதல் தொடர்பான பாலியல் ஒப்புதல் சட்டங்கள், ஒப்புதல் இல்லாமல் உடலுறவு குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் என்பன, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் உள்ள இலங்கை அணியின் ஹோட்டலில் கைது செய்யப்பட்ட குணதிலக்கவுக்கு சிட்னி நீதவான் நேற்று (7.11.2022) பிணை வழங்க மறுத்த நிலையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்த வழக்கு 2023, ஜனவரி 12 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் பாலியல் தொடர்பான பதிய சட்டங்கள், 2022, ஜூலை 1, அன்று அல்லது அதற்குப் பிறகு செய்யப்பட்ட குற்றங்களுக்குப் பொருந்தும். புதிய சட்டத்தின்படி, ஒப்புதல் அல்லது இலவச மற்றும் தன்னார்வ ஒப்பந்தம் என்பது உறுதியான சம்மதத்தின் அடிப்படையிலானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை என்றால் அல்லது போதைப்பொருள் அல்லது மதுபானம் உட்கொள்வதால் சம்மதிக்க முடியாமல் போனால், தூங்கிவிட்டாலோ, அது ஒப்புக்கொண்டதாக கருத்தப்படாது.
பாலுறவு நடவடிக்கைக்கான ஒப்புதல் எந்த நேரத்திலும் திரும்பப் பெறப்படலாம், அதன்பின் எந்தவொரு பாலியல் செயல்பாடும் ஒப்புதல் இல்லாமல் இருக்கும் என்று புதிய சட்டம் கூறுகிறது.
இந்த நிலையில் குணதிலக தற்போது சீர்திருத்த நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பிணை மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நேற்று ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டு, குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக
அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்துள்ளதாகவும், எதிர்கால
சுற்றுப்பயணங்களுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என்றும் கூறியுள்ளது.




