தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவி.. அராசாங்கத்துக்கு தொடர் அழுத்தம்
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவரின் பதவி தொடர்பில், தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பதவி சில மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்து வரும் நிலையில், அதனை நிரப்பவேண்டும் என்றும், ஆணைக்குழுவின்; செயற்பாடுகளை சிறப்பாக்கவேண்டும் என்றும் பல தரப்புக்கள் கோரி வருகின்றன.
அரசியலமைப்பு பேரவை
இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை தலைவர் என்ற அடிப்படையில், இந்த கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தலைவர் பதவியை வகித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன 2025 மார்ச் மாதம் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தப்பதவி வெற்றிடமாகவே உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




