பனை அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பதவி: ஈ.பி.டி.பி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று (05.11.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க ஊழலை ஒழிப்போம் ஊழல் வாதிகளுக்கு தமது அரசில் எந்தவொரு இடத்திலும் பதவி நிலை வழங்கப்படாது என கருத்தை முன்வைத்தே ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்.
பனை அதிகார சபை
இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனங்களில் பதவிநிலை வகித்து பல்வேறு வகைகளில் பல கோடிகளை ஊழல் மோசடிகளை செய்தவர் என கூறப்படுகின்றது.
இவை கடந்த காலஙகளில் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன. அந்தவகையில் இவ்வாறான ஒரு மோசடி மிக்க நபரை பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமித்தமையானது ஜனாதிபதியின் கருத்தை அல்லது அவரது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் அவருக்கு வாக்களித்த மக்களையும் விசனமடைய செய்துள்ளது.
குறிப்பாக பனைசார் உற்பத்தி தொழிலை முன்னெடுக்கும் மக்களை பெரும் சங்கடத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
அத்துடன் அத்துறை சார்ந்தவர்களின் உழைப்பும் முதலீடுகளும் கேள்விக்குறியாக இருந்துவரும் நிலையில் இந்த நியமனத்தால் மேலும் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
