மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான தவிசாளராக விமலநாதன் மதிமேனன் இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றுள்ளார்.
இவர் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கான உள்ளுராட்சி தேர்தலில் மண்டூர் வட்டாரத்தில் போட்டியிட்டு 1101 வாக்குகளை பெற்றுள்ளார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
வர்த்தமானி
போரதீவுப்பற்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியினர் போட்டியிட்டு 50 வீதமான வாக்குகளைப் பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன் தவிசாளராக வி.மதிமேனனும், துணை தவிசாளராக பாலையடிவட்டை வட்டாரத்தில் தெரிவான தங்கராசா கஜசீலன் தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி நேற்றையதினம் வெளியிடப்பட்டிருந்தது.

இப்பதவியேற்பு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சணாக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபைச்செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam