யாழ். அராலியில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு! தகவல் வழங்க மறுத்த வட்டுக்கோட்டை பொலிஸார்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலியில் வைத்து பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (24.11.2023) இடம்பெற்றுள்ளது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது இவ்வாறு சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை வழங்க முடியாது
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு வினவியபோது சம்பவம் இடம்பெற்றது உண்மை என்றும், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட பொலிஸார், மேலதிக தகவல்களை வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸார் ஏற்கனவே பல விடயங்களை ஊடகங்களுக்கு வழங்காமல் மறைத்துப் பல அட்டூழியங்களில் ஈடுபட்ட நிலையில் அண்மையில் சித்தங்கேணி இளைஞரையும் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் தொடர்ந்தும் ஊடகங்களுக்குத் தகவல் வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam
