செம்மணி விவகாரத்தில் தமிழரசுக்கட்சியின் பொருத்தமில்லாத செயற்பாடு! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல்
செம்மணி விவகாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கை அராங்கத்திடமே மீண்டும் விசாரணை கோரியமை பொருத்தமில்லாத செயற்பாடு என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
சாணக்கியன் முன்மொழிந்த ஒத்திவைப்பு பிரேரணையில் சர்வதேச குற்றவியல் விசாரணை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் நடத்த வேண்டிய விசாரணை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணியின் ஆரம்ப கட்ட அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட பிரித்தானியாவிலுள்ள 15 எலும்புகூடுகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....



