தொடருந்து தொழிற்சங்கப் போராட்டம் விமானப் பயணங்களை பாதிக்காது : பெட்ரொலிய வளக் கூட்டுத்தாபனம்
தொடருந்து தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக விமானப் பயணங்கள் பாதிக்கப்படாது என இலங்கை பெட்ரொலிய வளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
விமானங்களுக்கான எரிபொருட்கள் போதியளவு கையிருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான 12 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சங்கப் போராட்டம காரணமாக இவ்வாறு எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
எனினும், விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் வகைகள் கையிருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது.

எண்ணெய்த் தாங்கிகள் வாகனங்கள் மூலமாக தரைவழியாக எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தை தவிர்ந்த வேறும் தனியார் நிறுவனங்களும் எரிபொருள் விநியோகம் செய்வதனால் விமானப் போக்குவரத்திற்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam