பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மின்சார சபை!
இலங்கை மின்சார சபை இன்று பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
மின்சார நுகர்வோர் தொடர்ந்து மின் கட்டணத்தை செலுத்தாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நுகர்வோர் தங்கள் மின்சார கட்டணங்களை செலுத்துவதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “நாங்கள் இன்னும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
தற்போது செலுத்த வேண்டிய மின் கட்டணம் மட்டும் சுமார் 44 பில்லியன் ரூபாவாகும். இதில் நாங்கள் வட்டியை சேர்க்கவில்லை. கட்டணத்தை மட்டுமே செலுத்துமாறு கோருகின்றோம்.
கட்டணத்தை செலுத்தக்கூடியவர்களும் இந்த காலப்பகுதியில் அதனை செலுத்தத் தவறியுள்ளனர்.
இதனால் நாங்கள் பாரிய நெருக்கடிக்கு முகமகொடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam