இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பு விவகாரம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இன்று (05.09.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சூரிய சக்தி மின் நிலையம்
குறித்த சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் நிலக்கரி அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
சம்பூரில் நிலக்கரி அனல்மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு பதிலாக சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் வரி விதிப்பு... முதல் முறையாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க் News Lankasri
