சமட்ட நிவஹண' வீடுகளை கையளிக்கும் நிகழ்வு
'சமட்ட நிவஹண' வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் தெல்லிப்பழை குட்டியப்புலம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கடற்றொழில் நீதியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டு வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான வீட்டினை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் சேர்த்து 88 வீடுகளிற்கான நிதியோதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இதுவரை 80 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. 15 பிரதேச செயலகபிரிவுகளிலும் தலா 1 வீடு வீதம் இவ்வாரம் கையளிக்கப்பட்டுவருகிறது. அனைத்து வீட்டுப் பயனாளர்களிற்கும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு முன்பள்ளிச் சிறார்களிற்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் கபிலன், தேசிய வீடமைப்பு அமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் மாவட்ட முகாமையாளர் நி.ஜீவமலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், சிவகெங்கா சுதீஸ்னர் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வீட்டு திட்டம் தேவைப்படுகின்ற அனைவருக்கும் வீடு திட்டத்தை வழங்குவதோடு மக்கள் வறுமையின்றி அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்கு ஏற்றவாறு தமது அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். ஜெனீவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர் தொடர்பாகவும் தனது கருத்துக்களை குறிப்பிட்டார்.








