மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி! வேட்பாளர்கள் தேர்வு ஆரம்பம்
எதிர்வரும் மாகாணசபைத் தேரதலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாணசபைத் தேர்தல்
எதிர்வரும் 2026ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாக மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அதன்வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துள்ளது.
பொருத்தமான வேட்பாளர் தெரிவு
வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதன் ஊடாக பொருத்தமான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டமாகும்.
முற்கூட்டியே வேட்பாளர்களைத் தெரிவு செய்து மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



