காலி துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முந்திய கல் நங்கூரம்
காலி பழைய துறைமுகத்தின் இறங்குதுறைக்கு அருகில் 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் நங்கூரம் ஒன்று கடலுக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பழைய நங்கூரங்கள், ஒன்றாகக் கட்டப்பட்டு நங்கூரமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் போன்றவை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று துளைகள் கொண்ட நங்கூரம்
குறித்த கல் நங்கூரம் கடந்த 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு சொந்தமானது என்பது சமீபத்திய நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகை மூன்று துளைகள் கொண்ட நங்கூரம் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கப்பல்கள் மற்றும் அரபுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்ட கடற்பகுதியில மேலதிக தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவ்விடத்தில் கப்பல் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |