வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்(Photos)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.அ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலை அரசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், திருமதி. சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா, வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் இரா. சும்பந்தன் மற்றும் சாணக்கியன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்காத நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.





செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri