சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மத்திய மலைநாடு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் சரிவு
பகுதிகள் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஹட்டன் பகுதியில் இன்று 01.11.2023 திகதி பெய்த கடும் மழையினால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதி சுமார் 8 அங்குலம் வரை நீரில் மூழ்கின இதனால் பொது போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
பாடசாலை நிறைவு பெறும் வேளையில் குறித்த பிரதான வீதியூடாக நடந்த செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவாதக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந் நிலையில் சிறிது மழை பெய்தாலும் கூட இந்த வீதியில் நீரில் மூழ்கி வருகின்ற நிலையில் இது குறித்த பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்காதிருப்பது கவலையளிப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. எனவே மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டமும் உயர்ந்து காணப்படுகின்றது இதனால் நீர் நிலைகளில் நீராடுவதனையும் அதனை பார்வையிட செல்வதனையும் தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.