மத்திய வங்கியின் பிணைமுறிகள் ஏல விற்பனை
மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிகள் இன்று (27.09.2024) ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.
கடந்த 25ஆம் திகதி திறைசேரி ஒரு இலட்சத்தி இருபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகளை மத்திய வங்கி ஏலத்தில் விற்பனை செய்திருந்தது.
அதன் பிரகாரம் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 10 ஆயிரம் மில்லியன் பிணை முறிகள் என்பன இதன் போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஏலத் தொகை
குறித்த பிணைமுறிகளை வழங்குதல் மற்றும் அவற்றுக்கான ஏலத் தொகையை பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri