நாட்டில் பணவீக்கம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
நாட்டின் பணவீக்க வீதத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.2.2024) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அன்னிய கையிருப்பு
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்க வீதத்தை 5% ஆகக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 70% முதல் 6% வரை அதிகரித்துள்ள பணவீக்க வீதத்தை இன்று குறைக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இரண்டு மில்லியன் டாலராக குறைந்திருந்த அன்னிய கையிருப்பு தற்போது 4.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
