பொருளாதார வளர்ச்சி நிலைகள்: பொதுமக்களுக்கு மத்திய வங்கி விசேட அறிவிப்பு
பெருந்தொகையான மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி பற்றிய தகவல்கள் கிடைக்காமை அவதானம் செலுத்த வேண்டிய பிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிதி மோசடிகள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வெளிநாட்டு வட்டி வீதங்கள்
“வெளிநாடுகளில் வட்டி வீதங்கள் 2 வீதமாக குறைந்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள சேமிப்பாளர்கள் வட்டி வருமானத்தின் அடிப்படையில் தமது அன்றாட தேவைகளை தீர்மானிப்பதில்லை.
பொருளாதாரம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள பல்வேறு தீர்மானங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை மாத்திரம் பேசும் மக்களை சென்றடைவது குறைவாக உள்ளது.
மேலும், கடவுச்சொல் மற்றும் ஓடிபி குறியீட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் உள்ளது.
அது குறித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |