வரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய வங்கி அதிகாரிகள் எதிர்ப்பு
அரசாங்கத்தின் வரி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையை எதிர்ப்பதாக இலங்கை மத்திய வங்கி நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வரி மறுசீரமைப்பு
வரி மறுசீரமைப்பினால் சமூகத்தின் குறிப்பிடத்தக்களவு மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை முகாமைத்துவம் செய்து கொள்வது அவசியமானது என்பதனை ஒப்புக் கொள்ளும் அதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள ஏற்கனவே அழுத்தங்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு மேலும் சுமையாக வரிகளை அதிகரிப்பது ஏற்புடையதல்ல என சங்கம் தெரிவித்துள்ளது.