மத்திய வங்கியில் இருந்து மாயமான மில்லியன் கணக்கான பணம்! வெளியான விசேட அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் காணால் போனமை கண்டறியப்பட்டுள்ளது.
அவசியமான வழிமுறைகள்

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan