இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
ஒரு நாள் கொள்கை வட்டி விகிதத்தை தற்போது உள்ள 8 சதவீத நிலையில் தொடர்ந்து பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையின் கூட்டம் நேற்று (25.03.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாணயக் கொள்கை சபையின் முடிவு
தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார போக்குகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர், நாணயக் கொள்கை சபை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீத இலக்கு நிலைக்கு படிப்படியாக கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையிலும், பொருளாதாரம் அதன் அதிகபட்ச திறன் நிலையை அடைய உதவும் நோக்கத்துடனும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
