மத்திய வங்கி வர்த்தக சமூகத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை
தற்போதைய நெருக்கடி மற்றும் அதன் விளைவாக ஏற்படும் கஷ்டங்களுக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணியாக வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பணப்புழக்கம் இல்லாமை அமைந்துள்ளது.
அந்நிய செலாவணி பணப்புழக்கத்தின் பற்றாக்குறை எரிபொருள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளை வழங்குவதை பாதித்துள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை
வங்கி அமைப்பில் போதுமான அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு செலாவணி வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதாவது சில இறக்குமதிகள் மற்றும் கட்டண விதிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதித்தல், வங்கி அமைப்பு மூலம் வெளிநாட்டு வரவுகளை ஊக்குவிப்பது போன்றவை இவற்றில் அடங்கும்.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் வெற்றி, வர்த்தக சமூகம் மற்றும் வங்கி அமைப்புகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளன.
நிறுவனங்களுக்கான எச்சரிக்கை
எவ்வாறாயினும் சில சந்தை நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கவில்லை என்பது தமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக கண்காணிக்கவும் இணங்குவதை உறுதி செய்யவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
அத்துடன் ஏற்றுமதி வருமானம் உட்பட்ட விடயங்களில் பொருந்தாத அனைத்து நிகழ்வுகளுக்கும் சட்டங்களின் விதிகளுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய வங்கியின் கோரிக்கை
உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு இணங்குமாறு மத்திய வங்கி கேட்டுகொண்டுள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து ஏற்றுமதி வருமானங்கள் மற்றும் எஞ்சிய வருவாய் விடயத்தில் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு மத்திய வங்கி வர்த்தக சமூகத்தை கோரியுள்ளது.
இலங்கையில் பணவீக்கம் மேலும் உயரக்கூடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை |