வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் குறைகளை தெரிவிக்க புதிய இணையவழி முறையை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய வங்கியின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் முறைப்பாடு செயல்முறையின் பொறுப்புக்கூறல், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த இணையவழி முறைப்பாடு முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியிடம் முறைப்பாடு
இந்த அமைப்பு 24 மணி நேரமும் செயல்படுவதால், வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தங்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் முறைப்பாடுகளை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும், அங்கு ஒரு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால் அல்லது பதிலில் நுகர்வோர் திருப்தியடையவில்லை என்றாலோ இந்த புதிய முறையின் மூலம் மத்திய வங்கியிடம் முறைப்பாடு அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகளை https://reachus.cbsl.lk/ என்ற இணைப்பின் மூலம் அணுகலாம் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும்போது தகவல்களின் துல்லியத்தன்மையும், தொடர்புடைய ஆவணங்களை இணைப்பதும் மூலமும் உடனடியாக விசாரணை விரைவுபடுத்த உதவும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam